புதிய யுகத்தில் ஷி சாங் மனித உரிமை இலட்சிய வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்கள் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவை செய்தி அலுவலகம் மார்ச் 28ம் நாள் லாசா நகரில் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, ஷிச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி மத்திய கமிட்டி, மனித உரிமைக்கு மதிப்பு மற்றும் உத்தரவாதம் அளிப்பதை, புதிய யுகத்தில் ஷி சாங் நிர்வாகத்தின் முக்கிய அம்சமாகக் கொண்டு செயல்படுகிறது. “மக்களே முதன்மை” என்னும் மனித உரிமை கண்ணோட்டத்தைப் பின்பற்றி, குடி மக்கள் உரிமை, அரசியல், பொருளாதாரம் மற்றும் பண்பாட்டு உரிமைகள் முதலியவற்றை அதிகரித்து, மக்களின் பன்முக வளர்ச்சி மற்றும் பல்வேறு இன மக்களின் பொது செழிப்பை முன்னெடுத்து, ஷி சாங் மனித உரிமை இலட்சியம், பன்முகங்களிலும் முன்னேற்றங்களையும் சாதனைகளையும் பெறுவதை, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பாடுபட்டு வருகிறது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
படம்:VCG