வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல, அதற்கு மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் மக்களின் வரிப்பணத்தை சூறையாடுகின்றனர் என்ற தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், அவருக்கு வேறு வேலை இல்லை அதனால் தான் இவ்வாறு கூறுகிறார் என்றார். சட்டப்பேரவையில் பர்கூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்திருந்தார் என்ற கேள்விக்கு, மக்கள் தொகை அதிகரிப்பதற்கான அவசியம் உள்ளது ஆனால், கட்டாயப்படுத்தவில்லை என பதிலளித்தார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில் தேர்தல் பரப்புரையை எப்பொழுது தொடங்க உள்ளீர்கள் என்ற கேள்விக்கு… தேர்தல் பரப்புரையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன் என பதில் அளித்தார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 அல்ல, அதற்கு மேல் தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.