வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: அன்பில் மகேஷ்  

Estimated read time 0 min read

வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று, தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, திருச்சி சுப்பிரமணியபுரத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலை அருகே மே தின நினைவுச்சின்னத்தில் மாலை அணிவித்து திமுகவினர் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,”ஜூன் 8ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நேரத்தில் வெயில் கடுமையாக இருந்தால், முதல்வர் ஆலோசனைக்கு பின்னர் பள்ளிகள் திறப்புத் தேதி மாற்றம் செய்யப்படும்.” எனக்கூறினார்.

You May Also Like

More From Author