கோவையில் தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் கோலாகலகமாகக் கொண்டாடினர்.
https://youtu.be/jkph2nWCYi4?si=eL_7d5xOQWrbDe-3
கேரள மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகையை கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், உள்ள கல்லூரியில் ஓணம் பண்டிகையை மாணவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
கல்லூரி வளாகத்தில் மாணவிகள் அத்தப்பூ கோலமிட்டு மாவேலி மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
தொடர்ந்து, பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடி மாணவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.