தமிழ்நாட்டில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுகவை சேர்ந்த 5 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 5 தொகுதிகளிலும் எம்.எல்.ஏவாக தேர்வானவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடர்பாக ஜூலை 31-க்குள் பதிலளிக்கும்படி முதல்வர் விஜய், தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டமன்ற செயலாளருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
