தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்தது முதலே பல்வேறு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை செயலாளர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில், ”சென்னை குற்றப்பிரிவு சிஐடி டிஐஜி வருண் குமார், ஈரோடு அதிரடிப்படை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு அதிரடிப்படை ஐஜி பதவி காலியாக உள்ளதால், அந்தப் பதவி டிஐஜி பதவியாகத் தரம் குறைக்கப்பட்டு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

டிஐஜி அந்தஸ்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன், சென்னை குற்றப்பிரிவு சிஐடி டிஐஜியாகவும்,

எஸ்பி அந்தஸ்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி, தாம்பரம் மாநகரக் காவல், பள்ளிக்கரணை துணை ஆணையராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

You May Also Like

More From Author