தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்  

Estimated read time 0 min read

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சில பகுதிகளில் பலத்த காற்றும் இருக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று மதியம் வரை திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 10 செ.மீ. அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் 6 முதல் 7 செ.மீ. வரை மழை பெய்துள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், கோவை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.

You May Also Like

More From Author