உலக வளர்ச்சி பற்றிய முன்மொழிவின் 5வது ஆண்டு நிறைவு கூட்டத்தில் வாங்யீ பங்கெடுப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 28ம் நாள் பெய்ஜிங்கில் உலக வளர்ச்சி பற்றிய முன்மொழிவு முன்வைக்கப்பட்ட 5வது ஆண்டு நிறைவின் உயர்நிலை கூட்டத்தில் பங்கெடுத்தார்.

அவர் உரைநிகழ்த்துகையில், 5 ஆண்டுகளுக்கு முன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உலக வளர்ச்சி முன்மொழிவை முன்வைத்தார். உலக வளர்ச்சி இலட்சியத்துக்கு சீனத் தீர்வுத் திட்டத்தையும், பங்கையும் வழங்கினார். கடந்த 5 ஆண்டுகளில், அது குறித்த பயன் தரும் ஒத்துழைப்பு சாதனைகள் பெறப்பட்டுள்ளன. பதற்றமான சர்வதேச நிலைமையில், உலக வளர்ச்சி முன்மொழிவின் முக்கியத்துவம் மேலும் முனைப்புடன் காணப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஐ.நா துணை தலைமைச் செயலாளரும், தலைமைச் செயலாளர் செயலகத்தின் இயக்குநருமான ராட்ரே, உலக மேம்பாட்டு முயற்சியின் நண்பர்கள் குழு உறுப்பினர்களின் சீனாவுக்கான தூதர்கள், ஐ.நா வளர்ச்சி நிறுவனங்களின் சீனாவுக்கான பிரதிநிதிகள் முதலியோர் இக்கூட்டத்தில் பங்கெடுத்தனர். கடந்த 5 ஆண்டுகளில் உலக வளர்ச்சி முன்மொழிவுடன் தொடர்புடைய முன்னேற்றங்களுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

You May Also Like

More From Author