சீனச் சரக்கு போக்குவரத்து மற்றும் கொள்வனவுச் சம்மேளனம் வெளியிட்ட புதிய தரவுகளின்படி, இவ்வாண்டின் முற்பாதியில், சீனாவின் மொத்த சமூக சரக்கு போக்குவரத்து மதிப்பு ஒரு கோடியே 80 இலட்சத்து ஓர் ஆயிரம் கோடி யுவான் ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.1 விழுக்காடு அதிகரித்துள்ளது. உயர் தொழில் நுட்ப ஆக்கத் துறை மற்றும் எண்ணியல் பொருட்கள் தயாரிப்புத் துறை முறையே 13.3 விழுக்காடு மற்றும் 12.3 விழுக்காடு வளர்ச்சி அடைந்தன.
இச்சம்மேளனத்தின் செய்திதொடர்பாளர் சோ ஷி சேங் இது பற்றி கூறுகையில்,
சமூக சரக்கு போக்குவரத்தின் மொத்த அளவு நிதானமாக அதிகரிப்பதோடு, உலகமயமாக்கம், உயர் நிலை மயமாக்கம், பசுமைமயமாக்கம் உள்ளிட்ட தனிச்சிறப்புகளையும் அதிகமாக வெளிப்படுத்தியுள்ளது என்றார்.
இறக்குமதி சரக்குப் போக்குவரத் துறையில், அரை மின் கடத்தி தயாரிப்பு சாதனம், ஒருங்கிணை மின் சுற்றுகள் அமைப்பு ஆகியவற்றின் இறக்குமதி அளவு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட முறையே 20.4 விழுக்காடு மற்றும் 8.1 விழுக்காடு உயர்ந்துள்ளது.
