கோயில் சொத்துகள் மீட்பு – முதல்வர் விஜய் ஆலோசனை

Estimated read time 0 min read

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அறநிலையத் துறை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், துறை அதிகாரிகள், நிதி அமைச்சர், நிதித் துறை செயலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோயில் சொத்துக்களை மீட்டு பாதுகாப்பது, பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்வது, கோயில் விழாக்கள், தேரோட்ட நிகழ்வுகளின்போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, கோயில்களில் நடக்கும் முறைகேடுகளை தடுப்பது, அதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

குடமுழுக்கு செய்யப்படாத கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு செய்வது பற்றியும் முதல்வர், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

You May Also Like

More From Author