சீனாவின் சில அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தடை பட்டியலில் சேர்த்துள்ளது குறித்து சீன வணிகத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜூலை 29ஆம் நாள், கேள்விக்குப் பதிலளிக்கையில்,
அமெரிக்காவின் இச்செயலுக்கு சீனா கடும் மனநிறைவின்மை மற்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்றார்.
சீனாவின் இத்தகைய நிறுவனங்களின் மீது அமெரிக்கா காரணமின்றி பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும் என்று சீனத் தரப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது. சீனாவின் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு நியாயமான, மற்றும் பாகுபாடு இல்லாத வாய்ப்புகளை அமெரிக்கா வழங்க வேண்டும். சீனாவின் இத்தகைய நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களைப் பேணிக்காக்கும் வகையில், தேவையான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
