தாக்குதல் குறித்து பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு  

Estimated read time 0 min read

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இதை உறுதிப்படுத்தி உள்ள இந்திய பிரதமர் மோடி, வளர்ந்து வரும் நிலைமை குறித்து தனக்கு விளக்கப்பட்டதாகவும், இந்தியாவின் கவலையை வெளிப்படுத்தியதாகவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டிய அவசரத் தேவையை வலியுறுத்தியதாகவும் கூறினார்.
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு, ஏவுகணை அமைப்புகள் மற்றும் ராணுவத் தலைமையின் முக்கிய கூறுகளை குறிவைத்து இஸ்ரேல் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) ஆபரேஷன் ரைசிங் லயன் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்தது.

You May Also Like

More From Author