எந்த கிழமைகளில் என்னென்ன தெய்வத்தை வழிபட வேண்டும் தெரியுமா..?

Estimated read time 0 min read

தமிழ் பாரம்பரியத்தில் திருக்கோவில் வழிபாட்டுக்கு எப்போதும் ஒரு தனித்துவமான மகத்துவமும் வழிமுறைகளும் உண்டு. வாரத்தின் ஏழு நாட்களிலும் குறிப்பிட்ட இறைவனை, அதற்குரிய கிழமைகளில் சென்று வழிபடுவதன் மூலம் மனித வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கும், கிரக தோஷங்களுக்கும் தீர்வு காண முடியும் என்று ஆன்மீகச் சான்றோர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தெய்வங்களை அறிந்து வழிபடும் போது, அதன் முழுமையான நற்பலன்களையும் அருள் ஆற்றலையும் பெற முடிகிறது.

பொதுவாக, ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய பகவானையும் சிவபெருமானையும் வழிபடுவது நற்பெயரையும் ஆரோக்கியத்தையும் தரும். திங்கட்கிழமை சோமவாரத்தில் சிவபெருமானை வலம் வந்து வழிபடுவது மன அமைதியையும், செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானையும் அம்பாளையும் வழிபடுவது தைரியத்தையும் கடன் நிவர்த்தியையும் தரும். புதன்கிழமை பெருமாளை வழிபடுவது கல்வியிலும் வியாபாரத்திலும் மேன்மையையும், வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி மற்றும் குரு பகவானை வழிபடுவது ஞானத்தையும் புத்திர பாக்கியத்தையும் தரும்.

வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடுவது செல்வ வளத்தையும், சனிக்கிழமை சனி பகவானையும் ஆஞ்சநேயரையும் வழிபடுவது தோஷ நிவர்த்தியையும் தரும் என்பது நம்பிக்கையாகும். அதேபோல, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் போது பிரகாரத்தை வலம் வருவதற்கும் சில குறிப்பிட்ட கணக்குகள் மற்றும் முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக எந்த தெய்வத்தையும் வலம் வரும்போது அமைதியான முறையில், இறை சிந்தனையுடன் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஏற்றபடி வலம் வரும் எண்ணிக்கையும் மாறுபடுகிறது. அந்த வகையில், விநாயகப் பெருமானை 1 முறையும், நவகிரகங்களை 9 முறையும், பெருமாளை 4 முறையும் வலம் வருவது வழக்கமாக உள்ளது.

குறிப்பாக, சிவபெருமானை வலம் வரும் போது 5 முறை வலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சிவபெருமானின் பஞ்சபூதத் தத்துவங்களையும், ‘நமசிவாய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த 5 முறை வலம் வரும் முறை அமைதுள்ளது. மேலும், சிவபெருமானை வலம் வரும்போது ‘சோமசூத்திரப் பிரதட்சிணம்’ என்ற பிரத்யேக முறையிலேயே வலம் வர வேண்டும் என்பதும், பிற தெய்வங்களுக்கு 3 முறை வலம் வருவது பொதுவான சிறப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சரியான நாளில் சரியான முறையில் தெய்வங்களை வலம் வந்து வழிபடுவது நமது வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

You May Also Like

More From Author