தென்மேற்கு சீனாவின் ஷிசாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள நாது லா கணவாய், எல்லை தாண்டிய வர்த்தகத்திற்காக சனிக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி ஞாயிற்றுகிழமை தெரிவித்துள்ளார்.
ஷிசாங்கின் ஷிகேஸெ பகுதியில் உள்ள யாடோங் மாவட்டத்திற்கும் இந்தியாவின் சிக்கிம் மாநிலத்திற்கும் இடையே கடல் மட்டத்திலிருந்து 4,545 மீட்டர் உயரத்தில் நாது லா கணவாய் அமைந்துள்ளது. எல்லை தாண்டிய வர்த்தகப் பாதையான இது, 2020-ஆம் ஆண்டில் தற்காலிகமாக மூடப்பட்டது. முன்னதாக 2019-ஆம் ஆண்டில் இதன் மொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அளவு 73 மில்லியன் யுவானை எட்டியிருந்தது.
தெற்காசிய நாடுகளுடனான சீனாவின் வர்த்தகத்திற்கு யாடோங் மாவட்டம் ஒரு முக்கிய நுழைவாயிலாகத் திகழ்கிறது.
நாது லா கணவாய் மீண்டும் திறக்கப்படுவது, இரு தரப்புக்கு இடையிலான பரஸ்பர வர்த்தகத்திற்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று யாடோங் மாவட்டத் தலைவர் கொங் ஷிஜுன் கூறினார்.
