டெல்லியில் பிரதமர் மோடியை தேமுதிக எம்பி எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார் தேமுதிக பொருளாளரும் எம்பியுமான எல்.கே.சுதீஷ். அவர் மோடியிடம் மூன்று முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்க வேண்டும், காவிரியில் நீரை திறந்து விட வேண்டும், தேமுதிக நிறுவனர் பத்மபூஷண் விஜயகாந்த்துக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பிரதமர் மோடியிடம் சுதீஷ் வைத்தார்.
