திரிஷாவை கொச்சைப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்- வைரலாகும் வீடியோ

Estimated read time 1 min read

முதலமைச்சர் காவேரி பிரச்சனையை பற்றி வாயை திறந்து பேச மாட்டுறாரு… அவருக்கு இருக்குற ஒரே கவலை திமுகவினர் மீது எப்படிபொய் கேஸ் போடலாம்னு தான்… என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச தொண்டர்கள் அனைவரும் திரிஷா என கோஷமிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவிவருகிறது.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “காவிரியில் இன்று ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய முதலமைச்சர் இதுகுறித்து வாயை திறந்து பேசுகிறாரா? இல்லை. அவருக்கு இருக்குற ஒரே கவலை திமுகவினர் மீது எப்படிபொய் கேஸ் போடலாம்னு தான்..” என பேசினார். அப்போது திமுகவினர், திரிஷா திரிஷா என முழக்கமிட்டனர். அதற்கு உதயநிதி ஸ்டாலின், எங்கு தண்ணீர் வருதோ இல்லையோ… அங்க தண்ணீர் வரணும் என பேசினார். உடனே காவிரியை சொன்னேன் என உதயநிதி ஸ்டாலின் நக்கலாக பேசினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில், “இவன் வீட்டு பெண்களை இப்படி தான் பேசுவானா? இந்த பொறுக்கியை தூக்கி உள்ளே வைங்க, முதல்வரே”, “தமிழ்நாடு அரசியலே தரம்கெட்டு போக காரணம் இந்த திமுக மட்டும் தான்….” என்பன போன்ற கருத்துகளை பதிவிட்டுவருகின்றனர்.

You May Also Like

More From Author