ஜூலை 1 முதல் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்கிறது: தகவல்கள்  

Estimated read time 1 min read

நீண்ட தூர மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்க விரும்புபவர்கள், வரும் ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு, இந்திய ரயில்வேயின் வருவாயை உயர்த்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டண உயர்வை அமல்படுத்தத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அதிகரிப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.
கட்டண உயர்வு விவரங்கள்:
500 கி.மீ., வரை – மாற்றமில்லை
500 கி.மீ.,க்கு மேல்: 2ம் வகுப்பு சாதாரண டிக்கெட் – கி.மீ.,க்கு ₹0.005(அரை காசு)
மெயில்/எக்ஸ்பிரஸ் சாதாரண வகுப்பு – கி.மீ.,க்கு ₹0.01 (ஒரு காசு)
ஏ.சி. வகை பெட்டிகள் – கி.மீ.,க்கு ₹0.02 (இரண்டு காசு)

You May Also Like

More From Author