பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வரும் ஊகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
பிரஸ்ஸல்ஸுக்கு சென்ற பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரிடம், ஜாங் ஊடகக் குழுவின் கட்டுரையாளர் சுஹைல் வாராய்ச்சிற்கு பேட்டியளித்தார்.
அப்போது இதுதொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த அசிம் முனீர், நாட்டின் பாதுகாவலர் என்ற தனது பங்கைத் தவிர வேறு எந்தப் பதவியிலும் தனக்கு ஆர்வம் இல்லை என்று கூறினார்.
ஜனாதிபதி பதவி அல்லது பிரதமர் பதவியில் மாற்றம் குறித்த வதந்திகள் முற்றிலும் தவறானவை என்று முனீர் கூறியதாக வாராய்ச் மேற்கோள் காட்டினார்.
பாகிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றுகிறதா ராணுவம்? அசிம் முனீர் நிராகரிப்பு
