பிரதமரை இன்று நேரில் சந்திக்கும் ஓபிஎஸ்…!!!

தமிழகம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியை இன்று திருச்சி விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் சந்திக்க உள்ளார்.

திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி இன்று வருகை தரும் நிலையில் அவரை சந்தித்து ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்த நிலையில் ஓபிஎஸ் உடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

You May Also Like

More From Author