2026 முதல் பாதியில் குறிப்பிட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி

சீனத் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொருளாதாரச் செயல்பாடு பொதுவாக நிலையாக உள்ளதோடு, முக்கிய குறியீடுகள் விரைவாக வளர்ந்து, நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து மேம்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில், வருடாந்திர வருவாய் 2 கோடி யுவானை தாண்டிய சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அதிகரிப்பு மதிப்பு, முந்தைய ஆண்டை விட 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது. அவற்றின் செயல்பாட்டு வருமானமும் மொத்த லாபமும் முந்தைய ஆண்டை விட முறையே 7.7 சதவீதம் மற்றும் 16.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே வேளையில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதித் துறையில் வலுவான வளர்ச்சிப் போக்கு காணப்படுகிறது. ஜூன் மாதத்தில் இத்தகைய நிறுவனங்களின் ஏற்றுமதி குறியீடு 52.8 சதவீதத்தை எட்டி, தொடர்ந்து 27 மாதங்களாக விரிவாக்க வரம்பில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author