சீனத் தேசிய அன்னிய செலாவணி நிர்வாகம் 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த ஜூலை மாதத்தின் இறுதி வரை, சீனாவில் அன்னிய செலாவணிக் கையிருப்புகள் 341880கோடி அமெரிக்க டாலரை எட்டி, ஜூன் மாத காலத்தில் இருந்ததை விட 0.07விழுக்காடு அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனப் பொருளாதாரமானது, புதிய வளர்ச்சி உந்துசக்திகள் மற்றும் மேம்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்பு ஆகிய போக்குகளைக் காட்டி, வலுவான மீள்திறனையும் உயிராற்றலையும் வெளிப்படுத்துகிறது. இது அன்னியச் செலாவணிக் கையிருப்புகளின் அடிப்படை நிலைத்தன்மையைப் பேணுவதற்கு துணைபுரியும் என்று இந்நிர்வாகத்தின் பொறுப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
