கடந்த ஆண்டின் அக்டோபர் திங்கள் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்புக்குப் பிறகு, சீனா மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமெரிக்கா பல முறை வெளியிட்டன. அமெரிக்காவின் நியாயமற்ற கட்டுப்பாடு மற்றும் ஒருசார்பு மேலாதிக்கத்தை எதிர்கொண்ட சீனா, தேவையான பதிலடி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
சீனா மீது எதிர்மறை நடவடிக்கைகளை வெளியிட்ட அமெரிக்க கூட்டாட்சி செய்தித் தொடர்பு ஆணையம், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் ஆகியவற்றுக்குப் பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ள, சீன வணிகத் துறை அமைச்சகம் உள்ளிட்ட வாரியங்கள், 5ம் நாள் அறிவித்துள்ளன. இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களை சீனா பேணிக்காக்கும் மனவுறுதியை, அந்த நடவடிக்கைகள் வெளிக்காட்டுவதோடு, கட்டுப்பாடு மற்றும் தெளிந்த சிந்தனையுடன் சீன-அமெரிக்க நிலையான நெடுநோக்கு உறவைப் பேணிக்காப்பதில் சீனாவின் பொறுப்புணர்வையும் காட்டியுள்ளன.
ஆக்கப்பூர்வமான சீன-அமெரிக்க நெடுநோக்கு உறவைப் பேணிக்காப்பது, இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகிற்கும் தேவை. அமெரிக்கா சீனாவுடன் இணைந்து இரு நாட்டு அரசுத் தலைவர்களின் ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, உலகிற்கு நிலைத்தன்மை மற்றும் உறுதித்தன்மையை அளிக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது.
