12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
14-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்:
12-12-2025 முதல் 14-12-2025 வரை: தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை: வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 2025-2030ம் நிதியாண்டு வரை யூனிட்டுக்கு 8.25 ரூபாய் உயர்கிறது. மின்சார கட்டண உயர்வு பட்டியல் வெளியானது. புதுச்சேரி புதுச் சேரியில் வீட்டு உபயோக [மேலும்…]
2026ஆம் ஆண்டு ஏபெக் அதிகாரப்பூர்வமாற்ற மூத்த அதிகாரிகள் கூட்டம்(APEC informal senior officials‘ meeting) டிசம்பர் 11,12 ஆகிய நாட்களில் குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ட்சென் [மேலும்…]
பாகிஸ்தானுக்கான 7 பில்லியன் டாலர் மதிப்புள்ள விரிவாக்கப்பட்ட நிதி உதவியின் கீழ், சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) மேலும் 11 புதிய கட்டமைப்பு நிபந்தனைகளை [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதில் பல முக்கிய தேசியக் [மேலும்…]
சென்னையில் குடும்ப பிரச்னை காரணமாகச் சீரியல் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி தொடர்களில் நடித்து வந்தவர் [மேலும்…]
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 12-12-2025 மற்றும் 13-12-2025: தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது [மேலும்…]
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது. நவகிரக தலமான நாகநாத சுவாமி [மேலும்…]
திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவிலேயே தங்க ஏதுவாக, கோல்ட் கார்டு விசாவை ட்ரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பு என்ன? இந்தச் செய்தி தொகுப்பில் [மேலும்…]