கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில், திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா நடைபெற்றது.
நவகிரக தலமான நாகநாத சுவாமி கோயிலில், கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா, கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண பிரம்மோற்சவம், வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதில் ராகு பகவான், நாகவல்லி, நாகக்கன்னி அம்பாள்களுடன் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
