கட்சி பெயரைக் கூறி மக்களைச் சந்திக்க முடியாததால் தற்போது அரசுத் திட்டங்கள் வாயிலாக திமுகவினர் மக்களைச் சந்தித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
கோவையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், அவருடன் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், பெண்கள் எப்படி ஏமாற்றலாம் என யோசித்து உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை திமுக கொண்டு வந்திருப்பதாக விமர்சித்தார்.
கட்சி பெயரைக் கூறி மக்களைச் சந்திக்க முடியாத திமுக, தற்போது “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் வாயிலாக மக்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், காமராஜரை அவதூறாகப் பேசியபின்னும் காங்கிரஸ் மௌனம் காப்பது அவர்களது பலவீனத்தைக் காட்டுவதாகவும் கூறினார்.