2026-ம் ஆண்டு பிறப்பதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
பொதுமக்கள் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் புத்தாண்டை கொண்டாட தமிழக காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளையும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் மட்டும் கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 19,000 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்க டிரோன்கள் மற்றும் CCTV கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்: 1.10 லட்சம் போலீசார் பாதுகாப்பு, பட்டாசு வெடிக்கத் தடை
