சீனப் பொருளாதாரத்தின் நிலையான முன்னேற்றத்தை பிரதிபலிக்கின்ற இவ்வாண்டின் முதல் பாதியில் உயர் அதிர்வெண் தரவுகள்

சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் தேசிய தகவல் மையம் வழங்கிய பெருந்தரவுகளின்படி, ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில், ஆஃப்லைன் நுகர்வுத் தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 2.7 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மின்னணு பொருட்களுக்கான தேவை அதிகமாக இருந்து, கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 9.5 விழுக்காடு உயர்ந்தது. போக்குவரத்து மற்றும் உணவகத்துடன் தொடர்புடைய நுகர்வுத் தொகை, முறையே 6.1 விழுக்காடு மற்றும் 4.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

உயர் தொழில்நுட்பத் துறையில் முதலீட்டு உற்சாகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜனவரி முதல் ஜூன் வரை, செயற்கை நுண்ணறிவு, மனித உருவ ரோபோக்கள் போன்ற முன்னணி துறைகளில் மூலதன முதலீடு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 118.4 விழுக்காடு அதிகரித்துள்ளது. கணினி ஆற்றல் உள்ளிட்ட துறைகளில் எண்ணியல் அடிப்படைக் கட்டமைப்பு திட்டப்பணிகளின் வெற்றி ஏகத் தொகை கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 23 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தொழில்துறையில், ஜனவரி முதல் ஜூன் வரை, தொழிற்பூங்காக்களின் உற்பத்தி செயல்பாட்டுக் குறியீடு கடந்த ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 3.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இக்காலத்தில், மேலும் ஆக்கப்பூர்வமான ஒட்டுமொத்த கொள்கைகளின் ஆதரவுடன், சீனப் பொருளாதாரம் நிலையான முன்னேற்றத்தை நிலைநிறுத்தி வருகிறது. இது “15ஆவது ஐந்தாண்டுத் திட்டத்திற்கு” உறுதியான அடிப்படையை இட்டுள்ளது.

You May Also Like

More From Author