சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் அவரது மனைவி பங் லீயுவான் அம்மையாரும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனாவிற்கு வருகை புரிந்துள்ள ஆப்பிரிக்க மற்றும் சர்வதேச விருந்தினர்களுக்கு செப்டம்பர் 4 ஆம் நாளிரவு பெய்ஜிங் மக்கள் மாண்டபத்தில் வரவேற்பு விருந்தளித்து அவர்களை வரவேற்றனர்.
அப்போது பேசிய ஷிச்சின்பிங், ஒவ்வொரு முறை, ஆப்பிரிக்க நண்பர்களைச் சந்திக்கும் போதும் அன்பும் மகிழ்ச்சியும் கொள்வதாகத் தெரிவித்தார். மேலும், சீன-ஆப்பிரிக்க பொது எதிர்கால சமூகக் கட்டுமானத்தின் அடிப்படை வலிமையாக விளங்குவதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கான தொடக்கப் புள்ளி உயர் நிலையில் உள்ளதாகவும் அதற்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றும் குறிப்பிட்டார். அதோடு, சீன-ஆப்பிரிக்கப் பொது எதிர்காலக் கட்டுமானம் மனித குலத்தின் பொது சமூகக் கட்டுமானத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்வதைத் தாம் ஆழமாக உணர்ந்துள்ளதாகவும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.