சீனா தனது மிகப்பெரிய இராணுவ அணிவகுப்பை இன்று நடத்தியது.
இதில் கடுப்பான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீன ஜனாதிபதி, அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா மற்றும் வட கொரியாவுடன் இணைந்து “சதி செய்வதாக” குற்றம் சாட்டி, ஜி ஜின்பிங்கை கடுமையாக சாடினார்.
“அமெரிக்காவிற்கு எதிராக சதி செய்யும் விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன்னுக்கு எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டிரம்ப் புதன்கிழமை தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஜியை நோக்கி எழுதிய பதிவில் கூறினார்.