ஜூலை 12ஆம் நாள், கூறப்படும் “தென் சீனக் கடல் நடுவர் தீர்ப்பு”என்ற சட்டவிரோதமான தீர்பாணை உருவாக்கப்பட்ட 10ஆவது ஆண்டு தினமாகும். பிலிப்பைன்ஸ், சில மேலை நாடுகளுடன் ஒத்துழைத்து, இது குறித்து மீண்டும் பிரச்சினையை மூட்டியது.
இந்தச் சட்டவிரோதமான தீர்பாணையை சீனா ஒருபோதும் ஏற்கவோ அங்கீகரிக்கவோ இல்லை. இது குறித்து, பிலிப்பைன்ஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள், ஜூன் திங்களின் பாதி முதல் ஆதாரமில்லாமல் சீனாவின் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் வெளியிட்ட கூட்டறிக்கையில், தென் சீனக் கடல் பற்றிய சீனாவின் “வரலாற்று உரிமைக்கு”சட்ட அடிப்படை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் என்ன செய்தாலும், இந்தத் தீர்பாணை சட்டவிரோதமாகவும், பயன் இல்லாதமாகவும் இருக்கும் உண்மையை மாற்ற முடியாது.
பல சர்வதேச சட்ட நிபுணர்கள் கூறுகையில், தீவுப்பாறைகள் உரிமை பிரதேசம் மற்றும் கடல் எல்லை பற்றிய சர்ச்சை, சீன-பிலிப்பைன்ஸ் சர்ச்சையின் சாராம்சமாகும். கூறப்படும் நடுவர் நீதிமன்றம் ஐ.நாவின் கடல் சட்டத்துக்கான பொது ஒப்பந்தத்தைத் தவறாக பயன்படுத்தி, நிர்வாக வரம்பை வலுக்கட்டாயமாக விரிவுபடுத்தியுள்ளது. அதன் நீதித்தன்மையும் சட்டப்பூர்வத்தன்மையும் சந்தேகத்திற்குரியது என்று தெரிவித்தனர்.
வரலாற்று பதிவுகளின்படி, கி.மு 2வது நூற்றாண்டில், சீன மக்கள் தென் சீனக் கடலில் பயணம் மேற்கொள்ளத் துவங்கி, தென் சீனக் கடல் தீவுக்கூட்டங்களைக் கண்டறிந்தனர். மேலும், வரலாற்றில், நிர்வாக அமைப்புகளை நிறுவுதல், கடற்படை ரோந்து பணி மேற்கொள்தல், வளங்களை வளர்த்தல், வானியல் அளவிடுதல், புவியியல் கணக்கெடுத்தல் உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், சீனா, தென் சீனக் கடல் தீவுகள் மற்றும் தொடர்புடைய கடல் பரப்பில் தொடர்ச்சியாகவும் அமைதியாகவும் நிர்வாகித்து வருகிறது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, கெய்ரோ பிரகடனம் மற்றும் போட்ஸ்டாம் பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச சட்ட ஆவணங்களுக்கிணங்க, தென் சீனக் கடல் தீவுகளுக்கான இறையாண்மையை சீனா மீண்டும் செயல்படுத்தியது. இது சர்வதேச சமூகத்தால் விரிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது, ஆசியான் நாடுகளுடன் சீனா கலந்தாய்வுகளை விரைவுப்படுத்தி, தென் சீனக் கடல் நடத்தை விதிமுறையை வெகுவிரையில் எடுக்க முயன்று வருகிறது. இதன் மூலம், தென் சீனக் கடல், அமைதிக் கடலாகவும், நட்புக் கடலாகவும், ஒத்துழைப்புக் கடலாகவும் விளங்கும் என்று நம்பப்படுகின்றது.
