வெனிசூலாவின் அரசுத் தலைவருக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

வெனிசூலாவின் அரசுத் தலைவராகத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ மோரோஸுக்கு சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜூலை 30ஆம் நாள் வாழ்த்து தெரிவித்தார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், அரசுத் தலைவர் மதுரோவின் தலைமையில், வெனிசூலா அரசு மற்றும் மக்கள், நாட்டின் நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதையில் முன்னேறி, நாட்டின் ஆக்கப்பணியில் பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளனர். சீனாவும், வெனிசூலாவும் ஒன்றுக்கொன்று நம்பிக்கை தரும் நண்பராகவும், கூட்டு வளர்ச்சி பெறும் கூட்டாளிகளாகவும் திகழ்கின்றன. சீன-வெனிசூலா உறவின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். அரசுத் தலைவர் மதுரோவுடன் இணைந்து, இரு நாட்டுப் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவைப் புதிய கட்டத்துக்கு கொண்டு சென்று, இரு நாட்டு மக்களுக்கு மேலும் செவ்வனே நன்மை புரிய விரும்புவதாக தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author