வெனிசுலா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலை  

Estimated read time 0 min read

அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ள விவகாரம் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது.
அங்குள்ள சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் வெனிசுலா அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

More From Author