வங்கதேச டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவில் நடத்தக் கூடாதாம்  

Estimated read time 0 min read

வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் அங்குள்ள சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் காரணமாக, இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக ஐபிஎல் 2026 தொடருக்கு ஏலம் எடுக்கப்பட்ட வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மானை உடனடியாக விடுவிக்குமாறு அந்த அணிக்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது.
ரூ.9.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த முஸ்தாபிசுருக்குப் பதிலாக மற்றொரு வீரரைத் தேர்வு செய்ய கேகேஆர் அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளைக் கண்டித்தும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

You May Also Like

More From Author