சீன-லாவோஸ் நட்புப்பூர்வ ஆண்டு துவக்கம்

 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷி ச்சின்பிங் பிப்ரவரி 5ஆம் நாள், லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான தோங்லூனுக்கு பதில் கடிதம் அனுப்பினார். 2026ஆம் ஆண்டு சீன-லாவோஸ் நட்புப்பூர்வ ஆண்டாகவும், தொடர்புடைய கொண்டாட்ட நிகழ்வுகள் துவங்குவதாகவும் அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், சீன-லாவோஸ் உறவு, வரலாற்றில் மிக சீரான காலக் கட்டத்தில் உள்ளது. லாவோஸ் தரப்புடன் பாரம்பரிய உறவை வெளிக்கொணர்ந்து, பயனுள்ள ஒத்துழைப்புகளை ஆழமாக்கி, பிரதேச அமைதி மற்றும் நிலைத்தன்மையையும், வளர்ச்சி மற்றும் செழுமையையும் முன்னேற்றுவதற்கு மேலும் பெரும் பங்காற்ற சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author