சீன மக்கள் குடியரசும் ஃபிஜி குடியரசும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டன. அதில் குறிப்பிடுகையில், இரு நாடுகள் பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை வளர்ப்பதற்கான விருப்பத்தை இக்கூட்டறிக்கை பிரதிபலித்துள்ளது.
அது பபரஸ் பயனுள்ள ஒத்துழைப்பை முன்னேற்றி கூட்டு வாக்குறுதியை வெளிபடுத்தியுள்ளது. சீன-ஃபிஜி உறவின் வளர்ச்சி இரு நாடுகள் மற்றும் இரு நாட்டு மக்களின் கூட்டு நன்மைகளை அதிகரித்துள்ளதோடு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் அமைதி, நிதானம் மற்றும் செழுமையையும் முன்னேற்றியுள்ளதாக இரு நாட்டுத் தலைவர்களும் ஒருமனதாகக் கருதினர்.
ஃபிஜி நாட்டின் சொந்த இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பேணிக்காப்பதற்குச் சீனா உறுதியாக ஆதரவளித்து வருகிறது. அதோடு, ஒரே சீனா கொள்கை என்ற கோட்பாட்டை ஃபிஜி உறுதியாகப் பின்பற்றி வருகிறது. பசிபிக் தீவு நாடுகள் மீதான சீனாவின் உதவிக்கு அரசியல் நிபந்தனையில்லாது. இது பற்றி ஃபிஜி பாராட்டு தெரிவித்தார்.
இரு தரப்பும் பல்வேறு நிலையிலும் பல்வேறு துறைகளிலுமான பரிமாற்றத்தை வலுப்படுத்திப் பரஸ்பர அரசியல் நம்பிக்கையைத் தொடர்ச்சியாக ஆழமாக்கும். மேலும், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்னெடுப்பின் கூட்டு கட்டுமானத்தில் ஃபிஜியுடனான வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களின் தொடர்பை இரு தரப்பும் தொடர்ந்து வலுப்படுத்தி இரு தரப்பு வர்த்தக ஒத்துழைப்பை விரிவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.