சீனச் செம்படையின் நீண்ட பயணம் வெற்றி பெற்றதன் 90ஆம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் மாநாடு அக்டோபர் 22ஆம் நாள் பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இதில் உரை நிகழ்த்துகையில், வரலாற்றை மனதில் ஆழப்பதிந்தால் மட்டுமே எதிர்காலத்தைப் படைக்க முடியும் என்று தெரிவித்தார். மேலும், முழுக் கட்சியும், முழு இராணுவமும், நாட்டின் பல்வேறு இன மக்களும் கட்சி மத்திய கமிட்டியின் தலைமையில் மேலும் நெருக்கமாக ஒன்றுபட்டு, மாபெரும் நீண்ட பயணத்தின் குறிக்கோளை வெளிக்கொணர்ந்து, விடா முயற்சியுடன் முன்னேறி, புரட்சிகர முன்னோடிகள் தொடங்கிய மாபெரும் இலட்சியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று, புதிய பயணத்தில் புதிய பிரகாசமான சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களான லீ ச்சியாங், சாவ் லேஜி, வாங் ஹுநீங், சை ச்சி, டிங் சுயெசியாங், லீ சி, சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் சேங் ஆகியோரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மேலும், இம்மாநாட்டின் போது சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், செம்படைக்குத் தலைமை தாங்கி மாபெரும் வரலாற்றுச் சாதனையான நீண்ட பயணத்தை மேற்கொண்ட மா சேதுங், சோ என்லாய், ச்சூ தே உள்ளிட்ட மூத்த புரட்சிவாதிகள், நீண்ட பயணத்திலும் பல்வேறு இடங்களிலும் போராடிய செம்படையினர்கள், நீண்ட பயணத்தின் போது செம்படைக்கு ஆதரவளித்த பல்வேறு இன மக்கள், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த செம்படையினர்கள் ஆகியோருக்கு மரியாதை செலுத்தினர்.
