சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 4ஆம் நாளிரவு, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.

அப்போது ஷிச்சின்பிங், சீன-அமெரிக்க உறவுக்கா நான் பெரும் முக்கியத்துவம் அளித்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், புத்தாண்டில், உங்களுடன் சேர்ந்து, இரு தரப்புறவு இன்னல்களைச் சமாளித்து நிதானமாக வளர்ந்து வருவதற்கு வழிகாட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இரு தரப்பும் முக்கியத்துவம் வாய்ந்த நல்ல விஷயங்களைக் கையாள வேண்டும். 2026ஆம் ஆண்டில், இரு பெரிய நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து, சமாதான சக வாழ்வுடன் கூட்டு நலன் தரும் ஒத்துழைப்புகளை மேற்கொள்ளும் ஆண்டாக அமைய வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

டிரம்ப் கூறுகையில், அமெரிக்க-சீன உறவு, உலகில் மிக முக்கியமான இரு தரப்புறவாகும் எனக் குறிப்பிட்டார். அதோடு, சீனாவின் வெற்றியைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியடையதாகவும், சீனத் தரப்புடன் ஒத்துழைப்புகளை வலுப்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.

தைவான் பிரச்சினை மீதான சீனாவின் மிகுந்த கவனத்தைக் கவனித்து வருவதாகத் தெரிவித்த டிரம்ப், சீனத் தரப்புடன் தொடர்புகளை வலுப்படுத்தி, தன் பதவி காலத்தின் போது, அமெரிக்க-சீன உறவின் சீரான, நிதானமான வளர்ச்சியை நிலைநிறுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.

You May Also Like

More From Author