சீன ஊடகக் குழுமத்தின்வானொலி நிகழ்ச்சி ஒன்று துவக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்து

சீன ஊடகக் குழுமத்தின் “சிறிய எக்காளம்”என்னும் பெரும் வரவேற்பைப் பெற்ற வானொலி நிகழ்ச்சி துவக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் வாழ்த்து செய்தி அனுப்பினார்.

குழந்தைகளுக்கான கலாச்சாரம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் முயற்சிகளை மேற்கொண்டு, சோசலிச லட்சியத்துக்கு புதிய தலைமுறை திறமையான இளைஞர்களை உருவாக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் இச்செய்தியில் தெரிவித்தார்.

1956ஆம் ஆண்டு தொடங்கிய இந்நிகழ்ச்சி, நவ சீனாவில் பள்ளி தேரும் வயதிற்கு முந்திய குழந்தைகளுக்கான முதலாவது வானொலி நிகழ்ச்சியாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author