திருச்சி விழாவில் பிரதமர் மோடி கொடுத்த மெகா அப்டேட்..!

Estimated read time 1 min read

பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, எடப்பாடி பழனிசாமி, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பஞ்சப்பூரில் நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன், மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில், சுமார் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார் பிரதமர்.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு, மசகு எண்ணெய் உற்பத்தி, கிராமப்புற இணைப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு மற்றும் ரயில் சேவைகள் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பெட்ரோலியத் துறையில், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சுமார் ரூ.3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும். மேலும், 200க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கு எரிவாயுவை வழங்கும். அதோடு, 200க்கும் மேற்பட்ட இயற்கை எரிவாயு நிலையங்களை நிறுவும்.

சென்னையில் உள்ள மணலியில், ஆண்டுக்கு 672 ஆயிரம் மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் மசகு எண்ணெய் கலவை ஆலையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். சுமார் ரூ.1,490 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆலை, இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை பிரதமர் திறந்து வைத்தார். இது கிராமப்புறங்களில் சந்தைகள், பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளுக்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை 81 இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இரண்டு அமிர்த பாரத் விரைவு ரயில்கள், இரண்டு விரைவு ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த ரயில் போக்குவரத்து தமிழ்நாடு மற்றும் தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்கு இந்தியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு இடையேயான ரயில் இணைப்பை வலுப்படுத்தும். இதன் மூலம் பயணிகள் பயனடைவதுடன், பிராந்திய பொருளாதார வளர்ச்சியும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தில் பேசிய மோடி திருச்சியில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.. அப்போது அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் கூறி தனது உரையை பிரதமர் மோடி தொடங்கினார்.. மேலும் ” வீரத்திற்கும் பெருமைக்கும் சொந்தமான மண் திருச்சி.. மருதிருவர் மேஜர் சரவணனை நினைவு கூர்கிறேன்..

மலைக்கோட்டை விநாயகர், சமயபுரம் மாரியம்மன், அரங்கநாதரை வணங்குகிறேன்.. தமிழ்நாட்டில் என்.டி.ஏ ஆட்சியால் தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.. ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுக தூக்கி எறிய மொத்த மாநிலமும் தயாராகிவிட்டது. ஒரு குடும்பத்திற்கான ஆட்சியை தூக்கி எறிந்துவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்குமான ஆட்சிக்கு மக்கள் தயாராகிவிட்டனர்.

திருச்சி மண்ணில் ரூ.5655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறேன்.. மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலைக்கு உயர்த்தி உள்ளது. மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லிகையை மாலையில் பாரீஸ், நியூயார்க்கில் விற்கலாம்..

2014 முதல் தமிழ்நாட்டிற்கு ரூ.3 லட்சம் கோடி நிதி பகிர்வு செய்யப்பட்டுள்ளது.. இது காங்கிரஸ் அரசு வழங்கிய நிதியை விட பல மடங்கு அதிகம்.. 2021-ம் ஆண்டு மக்கள் திமுகவை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.. ஆனால் மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டது.

திமுக ஆட்சியில் அனைத்தும் ஒரு குடும்பத்தில் இருந்து தொடங்கி ஒரே குடும்பத்திடம் இருக்கிறது.. அதிகாரம் ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கும்.. ஊழல் மாடலுக்கு பெயர் போன திமுக.. இந்த மாடல் அரசு தான் ஒரு குடும்பத்தின் ஏடிஎம் எந்திரமாக தமிழ்நாடு மாற்றப்பட்டு விட்டது. இதே மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் சிக்கி இருக்கிறார்..பணத்துக்காக வேலை விற்கப்படும் போது ஒரு ஏழை மாணவனின் வாழ்க்கை கனவாக போகிறது. தமிழ்நாட்டின் பணம் எல்லாம் ஒரு குடும்பத்திடம் சென்று சேருகிறது..எப்படி அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேர்கிறதோ அதேபோல தமிழத்தின் ஊழல் பணம் எல்லாம் ஒரு குடும்பத்தை சென்று சேர்கிறது. அதன் குடும்ப சொத்தாக ஆகின்றது. திமுக கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆனது?” அதனால் வருகின்ற சட்டசபை தேர்தலில் திமுகவுக்கு தகுந்த பாடம் புகட்ட திமுக ஆட்சியை தூக்கி எறியுங்கள் நன்றி என தமிழில் கூறி தனது உரையை முடித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author