முக்கிய நகரங்களின் சிசிடிவி கேமராக்களை தணிக்கை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு  

Estimated read time 1 min read

இந்தியாவின் முக்கிய நகரங்கள் முழுவதும் உள்ள சிசிடிவி வலையமைப்புகளை விரிவாக தணிக்கை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது.
காசியாபாத் காவல்துறையால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வலையமைப்பை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநில காவல் படைகளுக்கும் இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பதற்றமான நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு சிசிடிவி கருவியையும் முழுமையாக நேரில் சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது என ‘ தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது .

You May Also Like

More From Author