மத்திய அரசின் தலையீட்டைத் தொடர்ந்து, ஆன்லைன் மூலம் பொருட்களை விநியோகிக்கும் பிளிங்கிட் (Blinkit) நிறுவனம், தனது வர்த்தக முத்திரையாக விளங்கிய “10 நிமிட டெலிவரி” என்ற விளம்பர முறையை நீக்க முடிவு செய்துள்ளது.
டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து எழுப்பப்பட்ட கவலைகள் மற்றும் அவர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அண்மையில் பிளிங்கிட், செப்டோ (Zepto), ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது, மிகக் குறுகிய காலத்திற்குள் பொருட்களை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டாயத்தால் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு: 10 நிமிட டெலிவரி வாக்குறுதியைத் திரும்பப் பெறுகிறது Blinkit
