சமூக ஊடகங்கள், டேட்டிங் செயலிகள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்களில் அதிகரித்து வரும் போலி கணக்குகள் மற்றும் சைபர் குற்றங்களைத் தடுக்க, பயனர்களுக்கு KYC கட்டாயமாக்க வேண்டும் என நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டம் ஆன்லைன் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று ஒருபுறம் கூறப்பட்டாலும், மறுபுறம் இது மக்களின் ‘தனிப்பட்ட தரவு பாதுகாப்பு’ மற்றும் ‘கண்காணிப்பு’ குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரப்பூர்வ அடையாளச் சான்றுகள் இல்லாத பயனர்கள் இதனால் இணைய சேவைகளைப் பெறுவதில் சிக்கல் எழலாம் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இணைய உலகில் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்பதே இந்தக் குழுவின் கருத்தாக உள்ளது.
ஆன்லைன் பாதுகாப்பை மேம்படுத்த KYC, வயது சரிபார்ப்பு முறையை பரிந்துரைத்தது நாடாளுமன்றக் குழு
