இந்தியாவின் மின்னணுவியல் பொருட்கள் உற்பத்தியை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ஏழு முக்கியத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாக அறிவித்துள்ளார்.
249 திட்ட முன்மொழிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த முதல் தொகுப்பு, வடிவமைப்பு சார்ந்த, சுயசார்பு கொண்ட மின்னணுவியல் உற்பத்திக்கு இந்தியாவை இட்டுச் செல்லும் ஒரு மூலோபாயத் தொடக்கத்தைக் குறிக்கிறது.
ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த ஏழு திட்டங்களுக்காக மொத்தம் ₹5,532 கோடி முதலீடு செய்யப்படும் என்றும், இதன் மூலம் 5,195 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்திக்கான 7 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்
