கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் – பாஜக குற்றச்சாட்டு

Estimated read time 0 min read

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் திமுக மாவட்ட செயலாளர் போல செயல்படுகிறார் என பாஜக நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் வெளி மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தையல் இயந்திரங்கள் எடுத்து வரப்பட்டன.

இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியான அழகுமீனா கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படும் நிலையில் அவர் மீது பாஜக மாவட்ட தலைவர் கோபகுமார் பல்வேறு புகார்களை தெரிவித்தார்.

அதில் ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியர் செயல்படுவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author