தங்கம் விலை தடாலடியாக குறைந்தது..!!

Estimated read time 1 min read

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்தது. அடுத்தடுத்த மாதங்களில் கடுமையாக விலை உயர்ந்து, ஆண்டு இறுதியில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் மேல் விற்பனையானது. இதனால் இந்த ஆண்டு பாதிக்குள் தங்கம் விலை ரூ. 2 லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென மூண்ட அமெரிக்கா – ஈரான் போரால் எதிர்பாராத சரிவு ஏற்பட்டிருக்கிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் தங்கம் விலை சர்வதேச சந்தையில் 4 ஆயிரம் டாலருக்கும் கீழ் குறைந்திருக்கிறது.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று (ஜூலை 01) தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13, 100க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author