மும்பை மெட்ரோவின் வழித்தடங்கள் 2A மற்றும் 7 ஆகியவற்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஏற்பட்ட தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.
இதனால் மெட்ரோ ரயில்கள் தாமதமாக இயங்குவதாகவும், பல நிலையங்களில் பயணிகள் அதிக அளவில் திரண்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும் மும்பை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
