அம்பாசமுத்திரம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோவில் பங்குளித்திருவிழா

Estimated read time 0 min read

அம்பை ஏப்.13

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில் பங்குனித் திருவிழா கடந்த 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது

தொடர்ந்து ஏழு நாட்கள் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது

8ம் திருவிழாவாகிய இன்று காலை பச்சை சாத்தி வீதி உலா மதியம் 1.30 மணிக்கு 21 பால்குட ஊர்வலம் மற்றும்நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கொளுத்தும் வெயிலில் அங்கப்பிரதட்சணம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

இதில்
அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தெட்சணாமூர்த்தி பொதிகாசம் என்று கோஷமிட்டவாறு அங்கப்பிரதட்சணம் செய்தனர்

பின்னர் அம்பை அகஸ்தீஸ்வரர் கோயிலில் தீப ஆராதனை நடைபெற்றது

ஏற்பாடுகளை
அம்பாசமுத்திரம்
ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்

You May Also Like

More From Author