மலேசியாவில் சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் வாசகர் சந்திப்பு

சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷி ச்சின்பிங்கின் கருத்து என்ற புத்தகத்தின் 5ஆவது தொகுதியின் ஆங்கில மொழி பதிப்புக்கான சீனா-மலேசியா வாசகர் சந்திப்பு ஏப்ரல் 30ஆம் நாள் மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.

ஷி ச்சின்பிங்கின் இந்த முக்கியப் படைப்பு, கீழை நாடுகளின் ஞானத்தை குறிக்கும் மாபெரும் வளர்ச்சி அனுபவங்களையும் ஆட்சிமுறை கோட்பாடுகளையும் கொண்டுள்ளது என்று இச்சந்திப்பில் பங்கேற்ற விருந்தினர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக தற்போதைய புவிசார் அரசியல் அமைப்பு மற்றும் உலகளாவிய ஆட்சிமுறை சிக்கலாக மாறி வரும் பின்னணியில், சீனா-மலேசியா இடையே படைப்புகளை வெளியிடுவதன் மூலம் நடைபெற்ற ஆட்சிமுறை அனுபவப் பரிமாற்றமானது, இருநாடுகளின் நட்பாரந்த பரஸ்பர நம்பிக்கையையும், கூட்டு வெற்றியையும் ஆழப்படுத்துவதற்கும், உயர்மட்ட உத்திநோக்கு சீனா-மலேசியா பொது எதிர்கால சமூகத்தின் கட்டுமானத்தை ஊக்குவிப்பதற்கும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

More From Author