தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு  

Estimated read time 0 min read

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 11) கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறிப்பாக குழித்துறை, திற்பரப்பு, தக்கலை, குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்ததோடு, குளிர்ச்சியான காற்றும் வீசியது. கோடை வெப்பத்தால் அவதிப்பட்டு வந்த பொதுமக்களுக்கு இந்தத் திடீர் மழை ஒரு பெரிய நிம்மதியை அளித்துள்ளது.
நிலத்தடி நீர் மட்டத்திற்கும் இந்த மழை பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

More From Author