கோவை மருத்துவமனையில் வானதி சீனிவாசன் – நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா!

Estimated read time 0 min read

கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை, டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், வானதி சீனிவாசனை டெல்லி முதல்வர் ரேகா குப்தா சந்தித்து நலம் விசாரித்தார்.

திருப்பதிக்குச் சென்று அர்ச்சனை செய்துவிட்டு வந்துள்ளதாகவும், விரைவில் குணமடைய வேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனை என்றும் வானதி சீனிவாசனிடம் ரேகா குப்தா தெரிவித்தார். கோவை வடக்குத் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும், இந்தத் தேர்தலில் வெற்றி நிச்சயம் என்றும் ரேகா குப்தா கூறினார்.

You May Also Like

More From Author